< Back
மாநில செய்திகள்
பெரும்பாக்கத்தில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்ச்சி பெறாததால் விரக்தியில் விபரீத முடிவு
சென்னை
மாநில செய்திகள்

பெரும்பாக்கத்தில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்ச்சி பெறாததால் விரக்தியில் விபரீத முடிவு

தினத்தந்தி
|
22 Jun 2022 7:59 AM IST

பெரும்பாக்கத்தில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகன் முகேஷ் (வயது 15). இவர் சென்னை சிந்தாதிரிபேட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முகேஷ் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்குவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கிருந்த டாக்டர்கள் முகேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவரது சாவு குறித்து விசாரித்து வருகின்றார்.

மேலும் செய்திகள்