கோயம்புத்தூர்
தேயிலை செடிகளில் கொசு தாக்குதல்
|வால்பாறை பகுதியில் தேயிலை செடிகளில் கொசு தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் தேயிலை செடிகளில் கொசு தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொசு தாக்குதல்
மலைப்பிரதேசமான வால்பாறையில் பணப்பயிர்களான தேயிலை, காபி, ஏலக்காய் மற்றும் குறுமிளகு ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக 13 ஆயிரம் ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது. இந்த செடிகளை ஒவ்வொரு காலநிலையை பொறுத்து நோய்கள், பூச்சிகள் தாக்குவது வழக்கம்.
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் செப்டம்பர் மாதம் என்பது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யக்கூடிய காலம் ஆகும். ஆனால் இந்த ஆண்டு சரிவர மழை பெய்யாமல், கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் தேயிலை செடிகளை கொசு தாக்கி வருகிறது.
மகசூல் பாதிப்பு
அவை செடிகளில் அமர்ந்து இளம் தளிர்களை துளையிட்டு சாற்றை உறிஞ்சி விடுகின்றன. இதனால் ஓட்டை விழுந்து கருப்பு புள்ளிகள் விழுந்து சுருண்டு விடுகிறது. மேலும் பழுத்து விடுவதால் அந்த இலைகளை தேயிலைத்தூள் உற்பத்திக்கு பயன்படுத்த முடிவது இல்லை.
மேலும் ஒருசில தோட்டங்களில் கொப்பள நோய் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.