< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் 178-வது சந்தனக்கூடு விழா
|10 Oct 2022 12:06 AM IST
பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் 178-வது சந்தனக்கூடு விழா
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தாவத் விருந்து, தப்ரூக் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் பரமத்திவேலூர் தர்கா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தர்கா பள்ளிவாசலை வந்தடைந்தது.
இதையடுத்து காலை நடைபெற்ற மீலாதுநபி விழாவில் முஸ்லிம் பெண்கள் தீபம் ஏற்றி தொழுதனர். இதில் அனைத்து மதத்தினர், தர்கா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.