< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சவுதியில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி
|23 May 2023 9:45 PM IST
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சீதாராமன் ஆகியோரது உடல்கள் விமானம் மூலமாக இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
அவர்களின் உடல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், கார்த்திக் மற்றும் சீதாராமனின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.