< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்
|2 Aug 2023 3:37 PM IST
பத்திரப்பதிவிற்கு வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை நாளை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு நாளை அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை பத்திரப்பதிவிற்கு வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜரானால் விரைவாக பத்திரப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நாளை அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.