< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுகவில் இணைந்த 50- க்கும் மேற்பட்ட பாஜகவினர்...
|29 May 2022 8:34 PM IST
சத்தியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட பாஜக வினர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
ஈரோடு,
சத்தியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட பாஜக வினர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.