< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே நீரில் மூழ்கிய 2 தரைப்பாலங்கள்: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே நீரில் மூழ்கிய 2 தரைப்பாலங்கள்: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பு

தினத்தந்தி
|
3 Nov 2022 10:43 AM IST

தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் மாணவர்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில், சிங்கபெருமாள் கோவில் - ரெட்டி பாளையம் இடையே இரண்டு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் மாணவர்கள் இருப்பதாக கூறியுள்ளனர், சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செங்கல்பட்டு நகருக்கு செல்லும் நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்