< Back
மாநில செய்திகள்
20-க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்கள்... தூத்துக்குடியில் பரபரப்பு
மாநில செய்திகள்

20-க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்கள்... தூத்துக்குடியில் பரபரப்பு

தினத்தந்தி
|
26 March 2023 8:31 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாரில் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 2 வெறிநாய்கள் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாரில் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 2 வெறிநாய்கள் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை, கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள், தேவாலயம் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்கள், அந்த பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆகியோரை 2 நாய்களும் விரட்டிச் சென்று கடித்துள்ளன.

இதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்