குரூப் 4 தேர்வில் 15% க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட் என தகவல்..!
|7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெற்றது. மேலும் தேர்வர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்தநிலையில், தற்போது தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், குரூப் 4 தேர்வில் 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட் என தகவல் வெளியாகியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர்விண்ணப்பித்திருந்த நிலையில் 18.5 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது