< Back
மாநில செய்திகள்
10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

தினத்தந்தி
|
10 Aug 2023 12:51 AM IST

10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு 60-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு இலவசமாக மனைப்பட்டாவுடன் திருவலஞ்சுழி அருகில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வசிப்பதற்காக வீடுகள் கட்டிக்கொடுக்காததால் அவர்கள் கீற்று மற்றும் பிளாஸ்டிக் ஷீட்டை மேற்கூரையாக்கி வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு சுவாமிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் பக்கவாட்டுச்சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. எனவே மாவட்ட நிர்வாகம் மழை காலம் தொடங்குவதற்கு முன்பு குறைந்த செலவில் நவீன முறையில் வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்