< Back
மாநில செய்திகள்
பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

"பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
14 Jun 2022 12:21 PM IST

பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் பல மாநிலங்களில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, கொரோனா தொற்று கட்டுப்பாடு குறித்து மாநில சுகாதார மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மன்சுக் மாண்டவியா கூறியதாவது;-

"கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விழிப்புடன் இருப்பது அவசியம். பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். முதியோருக்கான பூஸ்டர் தடுப்பூசியும் அதிகம் செலுத்தப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்