< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்' - அமைச்சர் ரகுபதி
|30 Jun 2024 8:32 PM IST
பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சேலம்,
பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அங்கு நீதித்துறையின் பங்களிப்பு மிகுந்த அவசியமாகிறது. பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் பல நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என தமிழக அரசின் உள்துறை மற்றும் நிதித்துறையிடம் சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த ஆண்டு மத்திய அரசின் பங்களிப்பு கிடைக்கும்போது, மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்."
இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.