சேலம்
மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; விசைத்தறி தொழிலாளி சாவு
|எடப்பாடி அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் விசைத்தறி தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் விசைத்தறி தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
விசைத்தறி தொழிலாளி
கொங்கணாபுரம் அருகே வெள்ளாளபுரம் செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 50), விசைத்தறி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது மொபட்டில் சின்னப்பம்பட்டி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அவர் ஓட்டிச் சென்ற மொபட் வெள்ளாளபுரம் பிரிவு ரோடு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் காயம்
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முனியம்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொங்கணாபுரம் போலீசார், செல்லப்பன் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.