பெரம்பலூர்
மொபட் மோதி தொழிலாளி சாவு
|மொபட் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 60). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக அந்தூரில் இருந்து குன்னம் நோக்கி நடந்து சென்றார். அப்போது குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசனின் மனைவி உஷா(26) என்பவர் குன்னம் தாலுகா அலுவலகம் செல்வதற்காக மொபட்டில் வந்தார். முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராவிதமாக மொபட் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அண்ணாதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அதேபோல் உஷாவும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அண்ணாதுரையை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி சின்னம்மாள் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.