< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகரில் மொபட்-பஸ் மோதல்; வாலிபர் பலி
|24 Aug 2023 4:38 PM IST
மறைமலைநகரில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
மொபட்- பஸ் மோதல்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் தயாநிதி (வயது 20), விக்னேஷ் (வயது 19), நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று ஒரே மொபட்டில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மறைமலைநகர் அருகே செல்லும்போது பின்னால் வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த தயாநிதியை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தயாநிதி பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.