< Back
மாநில செய்திகள்
நாளை மறுநாள் முதல் கிளாம்பாக்கத்தில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் கிளாம்பாக்கத்தில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை

தினத்தந்தி
|
30 Jan 2024 7:54 PM IST

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நாளை மறுநாள் (1-ம் தேதி ) முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நாளை மறுநாள் (1-ம் தேதி) முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என்றும் பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

விருப்பம்போல் பயணிக்கும் ரூ.1,000 பயண அட்டை, மாதாந்திர பயண சலுகை அட்டை பிப்.1 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் 50% மாணவர் சலுகை பயண அட்டையும், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கனும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்