< Back
மாநில செய்திகள்
சென்னையில் தொடங்கியது பருவமழை..! - மெட்ரோ நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
மாநில செய்திகள்

சென்னையில் தொடங்கியது பருவமழை..! - மெட்ரோ நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

தினத்தந்தி
|
31 Oct 2022 11:19 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

சென்னை,

சென்னை மாநகரம் முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்சார வாரியத்தின் புதைவிட கம்பி அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றும் இடங்களை சுற்றி முழுமையாக தடுப்பு வேலிகள் அமைத்து, வெளிநபர்கள் யாரும் உட்புகாமல் இருப்பதை கண்காணிக்க ஒப்பந்ததாரர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

சுரங்கப் பாதைகளில் நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான அனைத்து பணிகளும் உடனடியாக மேற்கொள்ளவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்