< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
|11 Aug 2023 1:57 PM IST
கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற்றன.
புதுடெல்லி,
கடந்த மாதம் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசினார். அமளிக்கு இடையே வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், மக்களவை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.