< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன
|28 Nov 2022 12:41 AM IST
திருக்கோவிலூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்தினர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கீதா உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. பின்னர் அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.