< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தினத்தந்தி
|
20 May 2023 6:25 PM GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமையல்கூட கட்டுமான பணி

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் நேற்று வாலாஜா நகராட்சி திருத்தணி தெற்கு தெருவில் பூண்டி சாமியார் குளம் அருகில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகளுக்கு சமையல் தயாரிக்கும் சமையல் கூடம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகள் 80 சதவீதம் முடிவு பெற்றுள்ளது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

கலெக்டர் வளர்மதி கூறுகையில், ''ராணிப்பேட்டை, ஆற்காடு நகராட்சிகளை இணைத்து ஆற்காட்டில் ஏற்கனவே உள்ள சமையல் கூடத்தில் சமையல் தயாரிக்கப்படும். தற்போது வாலாஜா, மேல்விஷாரம், அரக்கோணம், சோளிங்கர் நகராட்சிகளில் புதிய சமையற் கூடங்கள் நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது.

8 பேரூராட்சி பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் சமையற் கூடங்கள் ஊரக வளர்ச்சி துறை மூலமாக கட்டப்பட்டு வருகிறது. சமையல் கூடப் பணிகளும் மற்றும் பள்ளி கட்டிடம் கட்டும் பணிகளும் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்கப்பட்டு பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து பூண்டி சாமியார் குளம் சீரமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதை மாவட்ட கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாலாஜா நகராட்சி காமராஜர் தெருவில் கோபிநாத் என்பவர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.25 லட்சம் வங்கி கடன் உதவி பெற்று புத்தகங்கள் தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கி புத்தகங்கள் தயாரிக்கும் பணிகளை செய்து வருவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மக்களை தேடி மருத்துவம்

ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா லட்சுமி நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வீடு வீடாக பணியாளர்கள் சென்று பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருத்துவ பணியாளர்கள் தாய்மார்களுக்கு ரத்த கொதிப்பு பரிசோதனையும், சர்க்கரை அளவு பரிசோதனையும் செய்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுவது குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர் கமலராகவன், ஆற்காடு தாசில்தார் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன். வட்டார மருத்துவ அலுவலர் வேலு, மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியமா ஆபிரஹாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்