< Back
மாநில செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
வேலூர்
மாநில செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

தினத்தந்தி
|
20 May 2022 7:47 PM IST

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக சென்னையில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன் வேலூரில் ஆய்வு செய்தார். மேலும் இளநிலை பொறியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அப்போது பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.

இதையடுத்து அவர் சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டார். அந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு மீண்டும் இடத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். அப்போது குப்பைகள் தரம் பிரிக்கப்படும் எந்திரத்தின் செயல்பாட்டினை பார்வையிட்டார். மேலும் அங்கு மற்றொரு எந்திரத்தையும் பயன்படுத்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள், ஆர்.டி.ஓ. சாலையில் முடிக்கப்பெற்ற சாலைப்பணிகள் உள்ளிட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். முடிக்கப்பெறாத பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Tags :
மேலும் செய்திகள்