திருநெல்வேலி
திட்டப்பணிகள்-கண்காணிப்பு குழு கூட்டம்
|நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
கண்காணிப்பு குழு கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் கிராம மின் வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக கூட்டு குடிநீர் திட்டம், மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டம், தேசிய சமூக உதவித் திட்டங்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குடிநீர் திட்டப்பணிகள்
தொடர்ந்து அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று குழு தலைவர் மற்றும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமாரதாஸ், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.