< Back
மாநில செய்திகள்
மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடும்பு
மதுரை
மாநில செய்திகள்

மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடும்பு

தினத்தந்தி
|
23 Oct 2022 12:53 AM IST

மழை வெள்ளத்தில் உடும்பு அடித்து வரப்பட்டது.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சிறுமலை வனபகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஓடைகளில் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட 20 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்று வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்பவர் வீட்டுக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்அங்கு சென்று உடும்பினை போராடி பிடித்தனர். அதன்பின் சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனவர் பூபதிராஜனிடம் உடும்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதை குலசேகரன்கோட்டை சிறுமலை வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்