< Back
மாநில செய்திகள்
பட்டாசு தயாரிப்பை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- ஜி.கே.வாசன்
மாநில செய்திகள்

பட்டாசு தயாரிப்பை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
9 Oct 2024 4:14 PM IST

உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக்கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். அதற்காக வெடி தயாரிக்கும் நிறுவனத்தினர், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்