< Back
மாநில செய்திகள்
பணம் திருடியவர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

பணம் திருடியவர் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 12:30 AM IST

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

குன்னூர் அருகே ஒசஹட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். சம்பவத்தன்று சவுந்தர், தனது மனைவியுடன் பேக்கரிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சவுந்தர் அருவங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்