< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலம் அருகே ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ரூ. 9.28 லட்சம் திருட்டு; மர்ம நபர்கள் அட்டகாசம்
|6 Jun 2022 1:18 PM IST
சேலம் அருகே ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 9 .28 லட்சம் திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ஸ்டேட் பாங்கி பஸ் ஸ்டாப் அருகில் ஒரு தனியார் ஐஏஎஸ் பயிற்சி அகாடமி செயல்பட்டு வருகிறது. அதன் மேலாளராக கன்னங்குறிச்சி சேர்ந்த திலக் ராஜ் (வயது 42) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
அவர் நேற்று முன்தினம் மாணவர்கள் வழங்கிய பயிற்சி கட்டணம் 9 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாயை லாக்கரில் வைத்து பூட்டி சென்றார். நேற்று வந்த போது லாக்கரில் இருந்த பணம் முழுவதும் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார் .புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பணத்தை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.