< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கொல்லங்கோடு அருகே மீனவர் வீட்டில் பணம் திருட்டு
|22 Oct 2023 12:15 AM IST
கொல்லங்கோடு அருகே மீனவர் வீட்டில் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன்துறையை சேர்ந்தவர் ராபர்ட், மீனவர். இவர் சம்பவத்தன்று வள்ளவிளையில் உள்ள உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று காலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.63 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னல் மற்றும் பீரோவை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராபர்ட் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.