< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பணமோசடி புகார் : நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு
|27 Oct 2022 8:46 AM IST
சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்துள்ளார்.
இந்த நிலையில், சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.