< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: தலைமைச் செயலக அலுவலர் கைது
|4 March 2023 8:58 AM IST
இதில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ரவி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.