மயிலாடுதுறை
மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட இளைஞர்களிடம் பண மோசடி
|சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடி.
பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சிங்கப்பூரில் வேலை
மயிலாடுதுறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர், சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி நேர்காணல் நடத்தினார். அதில், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்டவர்களில் சிலரிடம் லேபர் வேலைக்கு ரூ.50 ஆயிரம், சூப்பர்வைசர் வேலைக்கு ரூ.1 லட்சம், டிரைவர் வேலைக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என பணம் பெற்றுக்கொண்டார். மேலும் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கித்தருவதாகவும் கூறினார்.
புகார் மனு
ஆனால் தற்போது வரை எங்களை வெளிநாடு அனுப்பிவைக்கவில்லை. பலமுறை அவரை தொடர்பு கொண்ட போதும் அவர் எங்களை வெளிநாட்டுக்கு அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பணத்தை திரும்பப்பெறலாம் என்றால் அவரை தற்போது தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
எனவே பணமோசடியில் ஈடுபட்ட அவர் மீது உரியநடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.