< Back
மாநில செய்திகள்
திண்டிவனத்தில்  வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

தினத்தந்தி
|
29 May 2022 10:37 PM IST

திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

திண்டிவனம்,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சுமன் (வயது 28). இவர் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் தங்கி, அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்துக்கு வந்து, செய்யாறு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த 3 பேர் சுமனை தாக்கி அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய்,செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், திண்டிவனம் ஓ.பி.ஆர். பார்க் பின்புறம் வசிக்கும் பிந்துமுருகன் மகன் அஜய் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அஜயை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்