< Back
மாநில செய்திகள்
பேரிகை அருகே கவனத்தை திைச திருப்பி முதியவரிடம் ரூ.4½ லட்சம் அபேஸ்மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பேரிகை அருகே கவனத்தை திைச திருப்பி முதியவரிடம் ரூ.4½ லட்சம் அபேஸ்மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
11 April 2023 7:00 PM GMT

ஓசூர்:

பேரிகை அருகே முதியவரின் கவனத்தை திசை திருப்பி முதியவரிடம் ரூ.4½ லட்சம் அபேஸ் செய்து தப்பி சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே வாணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜூஜியப்பா (வயது 62). விவசாயி. இவர் நேற்று பேரிகையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டு அதில் ரூ.50 ஆயிரத்தை தனியாக பையில் வைத்துக்கொண்டார். மீதி 4½ லட்சம் ரூபாயை ஒரு பையில் தனது மொபட்டில் வண்டியின் முன்புறம் வைத்து கொண்டு பாகலூர் நோக்கி சென்றார்.

இதனை கண்காணித்த 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஜூஜியப்பாவை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது சொன்னேபுரம் என்ற இடத்தில் சென்றபோது மொபட்டை வழிமறித்த வாலிபர்கள் ஜூஜியப்பா பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் கீழே விழுந்து விட்டதாக கூறி அவருடைய கவனத்தை திசை திருப்பினர்.

வலைவீச்சு

இதனை நம்பி ஜூஜியப்பா திரும்பி கீழே பார்த்தபோது, அந்த வாலிபர்கள் மொபட்டில் ரூ.4½ லட்சம் வைத்திருந்த பணப்பையை அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜூஜியப்பா உடனடியாக பேரிகை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சொன்னேபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விவசாயிடம் பணம் அபேஸ் செய்த வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பேரிகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்