< Back
மாநில செய்திகள்
அரசு மானியத்துடன் கடன் உதவி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அரசு மானியத்துடன் கடன் உதவி

தினத்தந்தி
|
1 Dec 2022 11:13 PM IST

அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட தொழில் மையம் மூலமாக அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம். இதற்காக வயது வரம்பு இல்லை. கல்வி தகுதி இல்லாத நபர்களுக்கு உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையும், சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையும் வங்கி கடன் உதவி பெறலாம். மேலும் 8-ம் வகுப்பிற்குமேல் தேர்ச்சி அடைந்தவர்கள் உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம், சேவை தொழிலுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும். இவைதவிர பொது பிரிவினர் ஆண்கள் நகர் பகுதியில் தொழில் தொடங்கும் பட்சத்தில் 15 சதவீதமும், கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீதமும், பிற சிறப்பு பிரிவான பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள் நகர் பகுதியில் தொழில் தொடங்கும் பட்சத்தில் 25 சதவீதமும், கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் தொழில் தொடங்கும் நபர்கள் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் இணைய வழியில் http://www.kviconline.gov விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்