நாமக்கல்
மோகனூரில்ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
|மோகனூர்:
மோகனூர் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் மோகனூர் வட்டார வள மையத்தில் ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பயிற்றுனர் உமாதேவி வரவேற்றார். மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆசிரியர் பயிற்றுனர்கள் தமிழரசி, விஜயா, பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பயிற்றுனர் ஆனந்தகுமார் ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து `தி கிட் சிறார்' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. சிறப்பு பயிற்றுநர்கள் மீனா, செல்வராணி, செந்தமிழ் செல்வி ஆகியோர் பெற்றோர்களுக்கு விளக்கி கூறினார்கள். இதில் இயன்முறை டாக்டர் பாரதி, பள்ளி ஆயத்த முகாம் பணியாளர் உஷாராணி, மணிமேகலை, பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.