< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
மோகனூரில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|12 March 2023 12:30 AM IST
மோகனூர்:
மோகனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மோகனூர் பகுதியில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையை தடுக்க கோரியும், கஞ்சா மற்றும் சந்துக்கடைகளில் மது விற்பனையை தடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கண்ணன், சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், பிரபு, ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.