< Back
மாநில செய்திகள்
மோகனூரில்  சுற்றுச்சூழல் பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

மோகனூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
20 Aug 2022 10:16 PM IST

மோகனூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மோகனூர்:

மோகனூர் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்திருமாலன், தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் என்ற சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் கழிப்பறை பயன்பாட்டை உறுதி செய்வேன். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பேன், தரம் பிரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன். தீங்கு விளைவிக்கக்கூடிய குப்பைகளை பாதுகாப்பாக அகற்றுவேன். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, மாட்டேன் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்