< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில்  மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை

தினத்தந்தி
|
17 Aug 2022 9:11 PM IST

நாமக்கல் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை

மோகனூர்:

நாமக்கல்லில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது, இதில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி நித்திஷா இயற்கை வளம் சார்ந்த சுலோகன் எழுதுதல் போட்டியிலும், பிளஸ்-2 மாணவி சுருதி ஓவிய போட்டியிலும் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளுக்கு சுதந்திர தின விழாவில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதேபோல் கொல்லிமலையில் வல்வில் ஓரி பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட இந்த பள்ளி பிளஸ்-2 மாணவி சந்தியா முதல் பரிசு பெற்றார். மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சம்ருதா, குகன்ஸ்ரீ, தேவிபிரியா, வர்ஷினி ஆகிய மாணவிகள் வெற்றி பெற்று பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுடரொளி, உதவி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், பள்ளி தமிழ் ஆசிரியர்கள் வீரராகவன், பாண்டியராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் நந்தினி, ஜீவா, ராதிகா, தீபக், ஓவிய ஆசிரியைகள் தமிழ்செல்வி, சங்கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்