< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
மோகனூரில் போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்
|29 Jun 2022 11:19 PM IST
மோகனூரில் போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்
மோகனூர்:
மோகனூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் போதை பொருட்களுக்கு அடிமையாக மாட்டேன் என்ற வாசகம் அடங்கிய பதாகையில் தாசில்தார் ஜானகி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பச்சைமுத்து, தலைமை துணை தாசில்தார் ஜெயலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்து போட்டனர்.