< Back
மாநில செய்திகள்
தமிழகத்திற்கு 5வது வந்தே பாரத்.. பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்த புதிய ரெயில்கள் விவரம்
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 5வது வந்தே பாரத்.. பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்த புதிய ரெயில்கள் விவரம்

தினத்தந்தி
|
30 Dec 2023 5:00 PM IST

தர்பங்கா-டெல்லி அம்ரித் பாரத் ரெயில் மற்றும் அயோத்தி- ஆனந்த் விகார் (டெல்லி) வந்தே பாரத் ரெயிலை அயோத்தி ரெயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது 2 அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இதில், தர்பங்கா-டெல்லி அம்ரித் பாரத் ரெயில் மற்றும் அயோத்தி- ஆனந்த் விகார் (டெல்லி) வந்தே பாரத் ரெயில் ஆகிய ரெயில்களை அயோத்தி ரெயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார். மற்ற ரெயில்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் ரெயில்களின் வழித்தடம்:

1. தர்பங்கா (பீகார்)- ஆனந்த் விகார் (டெல்லி). இந்த ரெயில் அயோத்தி வழியாக இயக்கப்படுகிறது.

2. மால்டா டவுன் (மேற்கு வங்காளம்) - பெங்களூரு விஷ்வேஷ்வரய்யா ரெயில் நிலையம் (கர்நாடகம்)

வந்தே பாரத் ரெயில்களின் வழித்தடம்:

1. ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா (ஜம்மு காஷ்மீர்)- புதுடெல்லி

2. அமிர்தசரஸ்- டெல்லி

3. கோயம்புத்தூர்- பெங்களூரு கண்டோன்மென்ட்

4. ஜல்னா- மும்பை

5. அயோத்தி- ஆனந்த் விகார் (டெல்லி)

6. மங்களூரு - மட்கான் (கோவா)

தமிழகத்தில் ஏற்கனவே 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 5வது வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி உள்ளது.

இதுவரை 5 வந்தே பாரத் ரெயிலை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்