< Back
மாநில செய்திகள்
மார்பக புற்றுநோய்க்கு நவீன அறுவை சிகிச்சை
தர்மபுரி
மாநில செய்திகள்

மார்பக புற்றுநோய்க்கு நவீன அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
14 Oct 2022 1:00 AM IST

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறினார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறினார்.

நவீன அறுவை சிகிச்சை

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்தது.

முகாமுக்கு பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கினார். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையை கண்டறியும் மோமோகிராம் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மார்பக புற்று நோய்க்கான நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இதேபோல் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த பிறகு தேவைப்படும் கிமோதெரபி மற்றும் அதிநவீன ஹார்மோன் ரிசப்டார் பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்படுகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அறிகுறிகள்

முகாமில் அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாந்தி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன், கண் மருத்துவத்துறை பேராசிரியர் இளங்கோ, நரம்பியல் துறை பேராசிரியர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மார்பக புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள், அந்த நோயை முன்கூட்டியே தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

மார்பக புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள், சுய பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் குறித்து அப்போது விளக்கப்பட்டது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா மற்றும் கருத்தரங்குகள் நடத்தி பரிசு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட து. முகாமில் பொது அறுவை சிகிச்சை இணை பேராசிரியர் தீப பிரியா மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்