< Back
மாநில செய்திகள்
கரடி தாக்கிய பெண்ணுக்கு நவீன அறுவை சிகிச்சை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கரடி தாக்கிய பெண்ணுக்கு நவீன அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
8 Oct 2023 1:45 AM IST

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கரடி தாக்கிய பெண்ணுக்கு நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த 2 வடமாநில பெண் தொழிலாளர்களை கரடி தாக்கியது. இதில் சுமதிகுமாரி(வயது 25) என்ற பெண்ணுக்கு இடது கால் பாதத்தில் எலும்பு முறிந்தது. அவர், வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பொள்ளாச்சி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் கரடி தாக்கிய பெண்ணுக்கு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியிலேயே நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண் தலைமையிலான குழுவினர் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து உடைந்த எலும்புகளை சரி செய்தனர். அவர்களுக்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்