< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நவீன "பெடல் ஸ்டல்" குடிநீர் வசதி
|6 Jun 2022 11:32 AM IST
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் "வெப்கோஸ்" நிறுவனம் சார்பில் "பெடல் ஸ்டல்" குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சென்னை விமான நிலையத்தில் இருப்பது போன்ற நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் "வெப்கோஸ்" நிறுவனம் சார்பில் ("பெடல் ஸ்டல்" டிரிங்கிங் வாட்டர்) அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு, தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து திறந்து வைத்தார்.
இந்த நவீன குடிநீர் மிஷின் மூலம் பட்டனை அமுக்கியதும் நேரடியாக வாய்க்குள் தண்ணீர் வருவதால், டம்ளர் பயன்படுத்த வேண்டாம். இதனால் கொரோனா தொற்று பரவும் பயம் இல்லை, குடிநீர் வீணாகுவதும் இல்லை. பெரியவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் நான்கு விதமான பைப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன குடிநீர் மிஷின் பயன்பாடு மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வறவேற்பை பெற்று வருகிறது.