< Back
மாநில செய்திகள்
பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி

தினத்தந்தி
|
1 Sep 2022 7:46 PM GMT

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி

கபிஸ்தலம்

சுவாமிமலை அருகே குடிதாங்கி ஊராட்சி கொத்தங்குடி கொள்ளிடம் ஆற்றுகரையிலும், கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கொள்ளிடம் ஆற்று கரையிலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. சுவாமிமலை அருகே கொத்தங்குடியில் நடைபெற்ற மாதிரி ஒத்திகை பயிற்சியை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருகிறது. வெள்ள காலங்களில் பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்லக்கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில் கும்பகோணம் ஆர்.டி.ஓ. லதா, கும்பகோணம் தாசில்தார் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம் கொள்ளிட ஆற்றுகரையில் நடைபெற்ற மாதிரி பயிற்சியில் தஞ்சாவூர் டி.ஆர்.ஓ. பொறுப்பு முத்து மீனாட்சி, ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் மற்றும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர், பொதுப்பணி துறையினர், வேளாண்மை துறையினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்