< Back
மாநில செய்திகள்
தீவிர புயலாக மாறியது மோக்கா..!!
மாநில செய்திகள்

தீவிர புயலாக மாறியது மோக்கா..!!

தினத்தந்தி
|
11 May 2023 11:26 PM IST

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. "புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது. மோக்கா என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14-ம் தேதி வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மோக்கா புயல் காரணமாக மீனவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி இருந்தது. இதன்படி வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்பவும், மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தி இருந்தது.

இப்புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாகியிருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்