< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் விரைவில் உயர வாய்ப்பு
|29 May 2024 9:58 AM IST
2021-ல் டெலிகாம் நிறுவனங்கள் 20% வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் மீண்டும் உயர உள்ளது.
சென்னை,
நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை வழங்கி வருகின்றன. வோடபோன் நிறுவனம் விரைவில், 5ஜி சேவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை, 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. அதை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.