திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் லாரி டிரைவரிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
|கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் லாரி டிரைவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பதி (வயது 46) என்பவர் சென்னை துறைமுகத்தில் இருந்து லாரியில் சரக்குகளை கொண்டு சென்றார். பின்னர் அவர் தனது லாரியை தொழிற்சாலையில் நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், லாரி டிரைவரின் செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், லாரி டிரைவரிடம் செல்போனை பறித்து சென்ற புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கண்டிகையை சேர்ந்த சீனிவாசன் (24) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.