கரூர்
நடமாடும் மருத்துவ முகாம்
|நடமாடும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
புகழூர் டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவனம் சார்பில் இலவச நடமாடும் மருத்துவ முகாம் வரும் 29-ந்தேதி ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறுகிறது.
அதன்படி ஓனவாக்கல்மேட்டில் காலை 8 மணிக்கும், நாணப்பரப்பில் காலை 8.45 மணிக்கும், கந்தசாமிபாளையத்தில் காலை 9.30 மணிக்கும், நல்லியாம்பாளையத்தில் காலை 10 மணிக்கும், சொட்டையூரில் காலை 10.30 மணிக்கும், மூலிமங்கலத்தில் காலை 11 மணிக்கும், பழமாபுரத்தில் காலை 11.45 மணிக்கும், மசக்கவுண்டன்புதூரில் மதியம் 12.30 மணிக்கும், குறுக்குபாளையத்தில் மதியம் 1 மணிக்கும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் டாக்டர்கள் ராஜா, செந்தில்குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்திரைகள் வழங்க உள்ளனர். எனவே கிராம மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என காகித ஆலை நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.