< Back
மாநில செய்திகள்
கருகிய நெற்பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ.
சிவகங்கை
மாநில செய்திகள்

கருகிய நெற்பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
27 Dec 2022 12:38 AM IST

தேவகோட்டை பகுதியில் கருகிய நெற்பயிர்களை மாங்குடி எம்.எல்.ஏ. பார்வையிட்டனர்.

தேவகோட்டை,

இந்த ஆண்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இதனால் மழையை நம்பி நெல் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர்.

இதை தொடர்ந்து அவர் சக்கந்தி ஊராட்சியைச் சேர்ந்த அனைத்து ஊர்களிலும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்து கேட்டார். பின்னர் அவர் இது குறித்து தமிழக முதல்-அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் எடுத்து கூறி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்தார்.

அப்போது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் அப்பாச்சி சபாபதி, வக்கீல் சஞ்சய், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்