< Back
மாநில செய்திகள்
மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைக்க எம்.எல்.ஏ உத்தரவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைக்க எம்.எல்.ஏ உத்தரவு

தினத்தந்தி
|
23 Dec 2022 9:14 PM IST

மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைக்க எம்.எல்.ஏ உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், வெங்கல் அருகே மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை மெய்யூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டார். மேலும், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொழுது ஒரு வார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும். இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்