< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அங்கன்வாடி மையங்களை திறந்த எம்.எல்.ஏ.
|2 Sept 2023 1:26 AM IST
அங்கன்வாடி மையங்களை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரூ23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பகவல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.